கோடை விடுமுறையை சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த ஊட்டி சிறப்பு ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10-க்கு புறப்படும் மலை ரயில், மறுமார்க்கமாக உதகையில் பிற்பகல் 2 மணிக்கு திரும்பும்.
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க, உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், கோடை விடுமுறைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த மலை ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீசன் முடிந்ததும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து மலை ரயிலில் பயணிப்பதால், ஜூலை 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மலை ரயிலை இயக்க சேலம் ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: காராமணிக் கொழுக்கட்டை