நீலகிரி கோடை விழா: சிறப்பு சுற்றுலா தகவல் மையம் திறப்பு!

Published On:

| By christopher

நீலகிரி கோடை விழாவுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி சுற்றுலா அலுவலகத்தில் சிறப்பு சுற்றுலா தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் கோடை சீசனாகும்.

அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலாத்தலங்களை காணவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் தோட்டக்கலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்தக் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடத்தப்படும். இதன்படி இந்த ஆண்டு  மே மாதம் 6ஆம் தேதி கோடை விழா தொடங்கியது.

மேலும் உதகையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற 125ஆவது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் மே மாதம் 19  முதல் 23 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

உலக பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் காலியாக உள்ள அறைகளின் தினசரி விவரம், தொடர்பு எண்கள், பார்க்கிங் வசதிகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த விவரங்களை,

0423-2443977 என்ற எண் அல்லது 8122643533 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு பயணிகள் பயன்பெறலாம் என்று  நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை!

கிச்சன் கீர்த்தனா: சில்லி சப்ஜி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share