சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு!

தமிழகம்

சர்ச்சைக்குரிய பதாகையை அகற்றச் சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அறநிலையத்துறை அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், தீட்சிதர்கள் மீது போலீசார் இன்று (ஜுன் 26) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதற்கிடையே ஜூன் 24ஆம் முதல் 27ஆம் தேதி (நாளை) வரை ஆகிய நான்கு நாட்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள்,

வழக்கமாக சாமியை தரிசனம் செய்யும் திருச்சிற்றம்பல மேடை எனப்படும் ’கனகசபை’ மீது பக்தர்கள் ஏறக்கூடாது எனத் தடை விதித்து தீட்சிதர்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டது.

இதற்கு பக்தர்கள் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

கனகசபையில் ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிரானது என இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறையினர் பதாகையை நேற்று அகற்ற வந்தனர்.

அப்போது கோவில் தீட்சிதர்கள் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலீசார் உடன் இன்று மாலை கோவிலுக்குள் வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் சர்ச்சைக்குரிய பதாகையை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், பக்தர்களை உள்ளே விடாமல் கதவை உள்பக்கமாக பூட்டியதாக தகவல் வெளியானது. இதையடுத்து கோவிலில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் கனக சபை மீது பக்தர்கள் ஏற கூடாது என்று வைக்கப்பட்ட்டிருந்த அறிவிப்பு பலகையை அகற்ற சென்றபோது கோவில் தீட்சிதர்கள் அறநிலையத்துறையின் அதிகார்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் கோவில் தீட்சிதர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் kஈழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஆணையம் கோரி ஆளுநரிடம் முறையீடு!

தமிழக காங்கிரஸ் தலைவர்: மாற்றப்படுகிறாரா அழகிரி?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு!

  1. அவா மேல் வழக்கு மட்டுமே பதிய முடியும் ஓய்.
    கைது பண்ண முடியவே முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *