கிச்சன் கீர்த்தனா: காராமணிக் கொழுக்கட்டை

Published On:

| By Monisha

பள்ளியில் இருந்து பசியோடு வீட்டுக்குத் திரும்பும் பிள்ளைகளுக்கு பொட்டாசியம் நிறைந்த இந்த காராமணிக் கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றும் ஆற்றல் காராமணிக்கு உண்டு. ஃபோலிக் அமிலம், கொலின், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைவாக கிடைக்கும். புரதச்சத்தும் மாவுச்சத்தும் நிறைந்த ஆரோக்கியமான உணவான இந்தக் கொழுக்கட்டை அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

காராமணி – அரை கப் (வேக வைக்கவும்)
பல்லாக நறுக்கிய தேங்காய் – கால் கப்
மல்டிக்ரெய்ன் சத்துமாவு – ஒரு கப்
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கும் அளவுக்கு
பச்சை மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்து, பச்சை மிளகாய், தேங்காய்ப் பல் போட்டுக் கிளறி, காராமணி, உப்பு சேர்த்துப் புரட்டவும். நீர் தேவையான அளவு விடவும். கொதிவந்தவுடன், அடுப்பைக் குறைந்த தணலில்வைத்து, சத்துமாவைக் கொட்டி, கைவிடாமல் கிளறவும். மாவு கெட்டியாகி வெந்தவுடன் இறக்கி, கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

கற்கண்டுப் பொங்கல்

வீட்டிலேயே க்ரில் உணவுகள்… கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share