How to Get Organic Farming Certificate

இயற்கை வேளாண்மைக்குச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஏன்?

தமிழகம்

செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கைச் சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைக்கும் சூழலில், How to Get Organic Farming Certificate

நேர்மையாக இயற்கைச் சாகுபடி முறையில் விளைச்சல் பார்க்கும் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு `அங்கக வேளாண்மைச் சான்றிதழ்’ வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மைச் செயல் திட்டத்தின்படி, நம் மாநிலத்திலும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை செயல்பட்டு வருகிறது.

அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் தனி நபராகவோ, குழுவாகவோ பதிவுசெய்து கொள்ளலாம்.

மேலும் கால்நடைப் பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப் பொருள்கள் சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில் பதிவு செய்யலாம்.

இயற்கை வேளாண் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிமையானது.

இதற்குத் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறையின் இணையத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன், உங்கள் பண்ணையின் பொது விவரக் குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் தரச் சான்று, ஆண்டு பயிர்த் திட்டம், நில ஆவணம் (சிட்டா நகல்), நிரந்தரக் கணக்கு எண் (PAN Card) போன்ற விவரங்களுடன் ரூ.4000 செலுத்த வேண்டும்.

சான்றளிப்புத்துறையில் உள்ள இரண்டு கமிட்டி உறுப்பினர்கள் உங்கள் ஆவணங்களைச் சோதனை செய்து உங்களுக்குத் தபால் மூலம் சான்றிதழை அனுப்பி வைப்பார்கள்.

உங்கள் பகுதியில் உள்ள இயற்கை வேளாண் இன்ஸ்பெக்டர் இந்தச் சான்றிதழை பெற முழுமையாக உதவி செய்வார். சான்றிதழ் பெற்ற பின்னர், ஒவ்வொரு வருடமும் அதைப் புதுப்பிக்க வேண்டும்.

அங்கக வேளாண் அதிகாரிகள் வருடத்துக்கு இரண்டு முறை நேரில் வந்து உங்கள் பண்ணையைச் சோதனை செய்வார்கள்.

இயற்கை வேளாண் சான்றிதழ், பயிர் முறைக்கு ஏற்றவாறு மாறும். காய்கறிகள் பயிர் செய்தால் உடனடியாக அவை இயற்கை வேளாண்மைக்குக் கீழ் வந்துவிடும். அதுவே பணப் பயிர் சாகுபடியாக இருந்தால் அது இயற்கை வேளாண்மைக்குள் வர மூன்று வருடங்கள் ஆகும்.

இயற்கை வேளாண் சான்றிதழ் கிடைத்தவுடன் தடை செய்யப்பட்ட உரங்களை எந்தக் காரணத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை விளைநிலங்களுக்கு உள்ளேயே கொண்டு செல்லக்கூடாது. பயிரிடுதல், இயற்கை உரம் அல்லது ஏதேனும் புதிய முறையைப் பின்பற்ற வேண்டும் என்றாலும் அங்கக அதிகாரிகளின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.

இதர தகவல்களுக்கு, விதைச் சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு இயக்குநர் – மின்னணு வளாகம், பிளாக் 3, 2வது தளம் சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-25 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இயற்கை விவசாயச் சான்றிதழ் தொடர்பாக மேலும் விவரங்களை seedcertification.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

“நமக்குத் தெரிஞ்ச இயற்கை அங்காடிகளுக்கு விளைபொருள்களை அனுப்பறதுக்குச் சான்றிதழ் தேவைப்படாது. ஆனா, நமக்குத் தெரியாத ஆட்கள், கடைகளுக்கு அனுப்பணும்னா சான்றிதழ் அவசியம்.

அதேபோல வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பணும்னா இயற்கை விவசாயச் சான்றிதழ் அவசியம்” என்கிறார்கள் இந்த சான்றிதழ் பெற்ற இயற்கை விவசாயிகள். How to Get Organic Farming Certificate

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

குழந்தைகளுக்கான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் உலோகத் துண்டுகள்: அதிர்ச்சியில் மக்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *