சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. இதில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைந்தன.
இந்த ஆண்டு 16.33 லட்சம் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 14,26,420 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 14,50,174 மாணவர்களில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் எந்த நேரமும் வெளியாகலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டுள்ளது.
14.26 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 87.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி 0.65 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 6.40 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்தவகையில், மாணவிகள் 91 சதவீதமும், மாணவர்கள் 84.60 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் மீண்டும் நாகை-இலங்கை கப்பல் சேவை ஒத்திவைப்பு: காரணம் தெரியுமா?
மம்மூட்டியின் மாஸ்… ராஜ் பி ஷெட்டியின் மிரட்டல்..”டர்போ” டிரைலர் எப்படி..?