சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ரூ.55 ஆயிரத்தை கடந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
கடந்த மே 10ஆம் தேதி அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
இந்நிலையில் இன்று (மே 13 தங்கம் விலை மேலும் 200 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.25 குறைந்து 6,725க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.90-க்கும் ஒரு கிலோ 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.
பிரியா
முதல்வரின் தனிச் செயலாளர் தினேஷ் குமாரின் தந்தை மறைவு!
நூற்றாண்டு பிறந்தநாளை நினைவு நாளாக காணும் கே.என்.ராஜ் 13.5.1924 – 13.5.2024