சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 30) சவரனுக்கு ரூ.54 குறைந்து ரூ.43,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்தது. ஆனால், திடீரென்று மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,496-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.54 குறைந்து ரூ.43,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7 குறைந்து ரூ.5,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.74,800-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.74.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு!
செந்தில் பாலாஜி நீக்கம் ஏன்? – முதல்வருக்கு ஆளுநர் கடிதம்!