சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 24) சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழ்நாட்டில் ஒரு வார காலமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது. இதனால் தங்கத்தின் விலை மீண்டும் 47 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவது நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் சிறிதளவு உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.76,800-க்கும் ஒரு கிராம் 30 காசுகள் அதிகரித்து ரூ.76.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிப்ரவரி 26 முதல் ஜாக்டோ – ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்!
வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!