ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, வீட்டு மற்றும் வர்த்தக சிலிண்டரின் புதிய விலையை நிர்ணயிப்பது வழக்கம்.
அதன்படி இன்று (மார்ச் 1) வெளியாகியுள்ள புதிய விலை நிலவரப்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூ.23.50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி தொடர்ந்து 7வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.918க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை குறைப்பில் அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள இந்த சமயத்தில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23.50 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை மீண்டும் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தொண்டர்களை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்
ஓட்டுநா் உரிமத்தை இனி நேரில் பெற முடியாது!