ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று (அக்டோபர் 29) வங்கதேசத்தை எதிர்கொண்ட நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் எட்வர்ட்ஸ் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார்.
வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிஷூர் மெஹெதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாடிய வங்கதேச அணிக்கு தங்களது தரமான பந்துவீச்சு மற்றும் அசத்தலான பீல்டிங் மூலம் அதிர்ச்சி அளித்தனர் நெதர்லாந்து அணியினர்.
வங்கதேச அணி 42.2 ஓவர்களில் வெறும் 142 ரன்களுக்கு பரிதாபமாக ஆல் ஆவுட் ஆனது.
இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 2வது முறையாக அபார வெற்றியை பெற்றது நெதர்லாந்து அணி.
உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணி இரு வெற்றிகளை பெறுவது இதுவே முதன்முறை.
முன்னதாக பலமிக்க தென் ஆப்பிரிக்கா அணியை 38 ரன் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி கொடுத்தது நெதர்லாந்து.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக ரன் குவித்த மெஹிதி ஹசன் 35 தவிர்த்து கேப்டன் ஷிகிப் அல் ஹசன் உட்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
நெதர்லாந்து அணி தரப்பில் 4 விக்கெட்டுகள் எடுத்த பால் வான் மீகிரன் ஆட்டநாகன் விருது பெற்றார்.
இந்த தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி தொடர்ந்து 5வது தோல்வியை பதிவு செய்துள்ள வங்கதேச அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…