இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய உடல் எடையை குறைத்து தோற்றத்தையே முழுமையாக மாற்றி, அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தங்கலான் படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்றும், தங்கலான் படத்தின் டீசர் வரும் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரமின் அடுத்த படமான சியான் 62 குறித்த அப்டேட் நேற்று (அக்டோபர் 28) வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமாரையும் அனைவரும் பாராட்டி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் அடுத்த படமான சியான் 62 படத்தை இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். சியான் 62 படம் குறித்த அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாக தொடங்கியுள்ளது.
சியான் 62 படத்தை HR பிச்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த வீடியோவில் ஒரு கிராமத்தில் மளிகை கடை நடத்தும் ஒரு குழந்தையின் தந்தையாக விக்ரம் வருகிறார் என்பது போல் காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
என்ன சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்க முடியலையா? இதோ சில உணவுகள்!