Yமானியக் கட்டணம்: பயனடைந்த மக்கள்!

public

உதான் திட்டத்தின் கீழ் மானியத்துடன் 4.6 லட்சம் பயணிகள் பயனடைந்துள்ளனர்.

உதான் திட்டம் அமல்படுத்தப்பட்டு 17 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அரசின் மானியத்துடனான இத்திட்டத்தின் கீழ் 4.6 லட்சம் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் விமானப் போக்குவரத்துக்கான கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த 2017 ஏப்ரல் 27ஆம் தேதிக்கும் 2018 செப்டம்பர் 23ஆம் தேதிக்கும் இடையிலான விவரங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு விமானச் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்ததால் குறைந்துள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தகவலின்படி, 17 மாதங்களில் 60 வழித்தடங்களில் ஏழு விமானப் போக்குவரத்து நிறுவனங்களால் 15,723 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

இவ்விமானங்களில் மொத்தம் 7.5 லட்சம் பயணிகள் பறந்துள்ளனர். அவர்களில் 4.6 லட்சம் பேர் மானியத்துடனான கட்டணங்களில் சேவை பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் மானியமின்றி சேவையைப் பெற்றுள்ளனர். ஏர் டெக்கான், ஏர் ஒடிசா ஆகிய இரு விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் தொழில் செயல்பாடுகள் சிறப்பாக இருந்திருந்தால் எண்ணிக்கை இன்னும் உயர்வாக இருந்திருக்கும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய 128 வழித்தடங்களில் ஏர் ஒடிசா நிறுவனத்துக்கு 50 வழித்தடங்களும், ஏர் டெக்கான் நிறுவனத்துக்கு 34 வழித்தடங்களும் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்விரு நிறுவனங்களும் மிகக் குறைவான விமானங்களையே இயக்கியுள்ளன. அதனால், பயனடைந்த பயணிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைந்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *