Iசர்க்கரை நோய் என்றால் என்ன?

public

மெடிக்கல் செக் அப்-9

நம் உடலுக்கு தேவையான அளவுக்கு இன்சுலின் உற்பத்தி இல்லாததாலும் மற்றும் இன்சுலின் செயல்பாடுக்கு எதிர்ப்பு ஏற்பட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி சர்க்கரை நோய் ஏற்படும்.

**சர்க்கரை நோயில் எத்தனை வகைகள் உள்ளன?**

சர்க்கரை நோயில் பல வகைகள் உண்டு அதில் இரண்டு முக்கியமான வகைகள் சர்க்கரை நோய் வகை 1 இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் , வகை 2 இன்சுலின் சாராத சர்க்கரை நோய்.

**சர்க்கரை நோய் எப்படி கண்டு கொள்வது?**

ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் சர்க்கரை 126 g/l கூடுதலாகவும் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்தும் சர்க்கரை 200 g/l கூடுதலாக இருந்தால் சர்க்கரை நோய் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

**யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது?**

உடல் பருமன் கூடுதலாக உள்ளவர்கள், 45 வயதிற்கு மேலே உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பிசிஒடி(pcod) உள்ள பெண்கள், பெற்றோர்கள் அல்லது உடன்பிறப்புகளுக்கு சர்க்கரை நோய் இருந்தால் சர்க்கரை நோய் வர கூடுதல் வாய்ப்புள்ளது.

**சர்க்கரை நோயினால் என்ன பாதிப்பு ஏற்படும்?**

கண் பார்வை குறைவு, சிறுநீரகம் பணி இழப்பு, நரம்பு தொந்தரவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தொந்தரவு ஏற்படலாம்.

**சர்க்கரை அளவு குறைக்க என்ன செய்ய வேண்டும்?**

உணவு கட்டுப்பாடு, நடை பயிற்சி, நேரத்திற்கு உணவு உண்பது, மற்றும் மருத்துவர் அறிவுரைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வது இவை அனைத்தும் செய்தால் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

**உணவில் என்னென்ன சேர்த்து கொள்ள கூடாது?**

சர்க்கரை, தேன், கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம், செயற்கை பானங்கள், சேர்த்துக்கொள்ளவே கூடாது.

**சர்க்கரை மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?**

இல்லை, சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் தான் உடம்புக்கு பாதிப்பு ஏற்படும்.

சர்க்கரை மாத்திரைகள் பல லட்சம் முறை ஆராய்ச்சி செய்த பின்னரே உபயோக உரிமம் பெற்று மக்களுக்கு வந்து சேருகின்றன. இவைகளால் பக்க விளைவுகள் மிகவும் கம்மி.

**சர்க்கரை அளவை என்ன அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்?**

வெறும் வயிற்றில் 140g/l மற்றும் உணவு உண்ட பிறகு 180 g/l கீழ் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது என்று அறிந்துகொள்ளலாம்.

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படும்?

மாரடைப்பு, பக்கவாதம், கண் மற்றும் சிறுநீரக தொந்தரவு ஏற்படாமல் தடுக்கலாம்.

இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் சாப்பாடு கட்டுப்பாடு மற்றும் நடை/உடற்பயிற்சி செய்து, வரும் முன் காப்போம்.

((கட்டுரையாளர் குறிப்பு))

**மருத்துவர் ரம்யா அய்யாதுரை**

**எம்.டி., டி.என்.பி., எம்.ஆர்.சி.பி (பொது மருத்துவம்)**

**மருத்துவ பேராசிரியர்**

**கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர்.**

**சர்வதேச மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர்.**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *