xசுவாமி அக்னிவேஷ்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு!

public

சமூகச் செயல்பாட்டாளரன சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் நேற்று(செப்-18) மறுத்து விட்டது.

ஜீலை17ம் தேதியன்று சுவாமி அக்னிவேஷ் ஜார்கண்ட்டிலுள்ள பாக்கூர் மாவட்டத்தில் லிட்டிபாரா என்ற இடத்தில் .பழங்குடி மக்கள் நடத்தும் விழா ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் பாஜகவினரின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா அமைப்பினரால் தாக்கப்பட்டார். அதற்கு அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் 17ஆம தேதி அன்று டெல்லியில் மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருந்தபோது அப்போதும் பாஜகவினரால் மீண்டும் தாக்கப்பட்டதாகக்கூறி போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் பாஜக அமைச்சர் ஒருவா் சுவாமி அக்னிவேசை ஒரு மோசடி பேர்வழி என்று கூறியதால் அந்த மாநில போலீசார் தாக்குதல் சம்பவத்தை விசாரிக்க மறுத்து வி்ட்டதாகவும், எனவே சிபிஐ வழக்கை விசாரிக்க வேண்டு்ம் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கின் விசாரணையானது, நீதிபதிகள் எஸ்ஏ. போப்டிடே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், நாங்கள் நடந்தது சரியென்றோ அல்லது தவறென்றோ கூறவில்லை. ஆனால் அந்த மாநில போலீசார் வழக்கை விசாரித்து வருவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும் இரண்டு சம்பவங்களும் வெவ்வோறானவை. வெவ்வேறு இடங்களில் நடந்தவை என்பதால் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க முடியாது அவருக்கு பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அணுகவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *