Wதெய்வராசு அய்யா – அப்டேட்குமாரு

public

எது எப்போது வைரலாகும் என இணைய உலகத்தில் சொல்லவே முடியாது. அருண் விஜய் நடித்த ‘தவம்’ என்கிற படம் சரியாக போகவில்லை. அது வெளியாகி 7 வருடங்கள் கழித்து அப்படத்தில் வடிவேலு சொன்ன ஆஹான்” என்கிற வார்த்தை திடீரென வைரலாகியது. எங்கு பார்த்தாலும் ஆஹான்தான். அதேபோல இப்போது 2004-ல் வெளியான சரத்குமாரின் “மானஸ்தன்” படத்தில் வடிவேலு எதேச்சையாக பாடிய, “தெய்வராசு அய்யா ஒரு நாயை வளர்த்தார்” பாடல் தேவையின்றி வைரலாகிவிட்டது. இதுதான் இணையம்.

// @maninilas

விஜயகாந்த்தும் வாசனும் கூட்டணியை விட்டு போனால் போகட்டும் என பேசவே இல்லை – வைகோ.

“நான் பேசலைங்க, பேசன மாதிரி கனவு கண்டேங்க” //

//@CaptainDheen

அவசரமா போறவன்கிட்ட அட்ரஸ் கேக்காத… இன்ஜினியரிங் முடிச்சவன்கிட்ட “அடுத்து என்ன பண்ண போற”னு கேக்காத…

கோவத்துல திட்டிருவாங்ய…//

// ‏@gokula15sai

கிரண்பேடி போன்ற ஆளுநரை தமிழ்நாட்டுக்கு நியமிக்கக்கூடிய அரசியல் துணிச்சல் நரேந்திர மோடி அரசுக்கு இருக்கிறதா? இது மில்லியன் டாலர் கேள்வி? //

//@mymindvoice

இந்த வாஸ்து சாஸ்திரம் எழுதினவங்க… மரத்தை வெட்டின இடத்துல வீடு கட்டினா கெட்டது நடக்கும்னு எழுதியிருக்கலாம். #ஆதங்கம் //

//@manipmp

சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவன் உருவ பொம்மை எரிக்க முயற்சி

# எதிர்ல இங்கு அனைவரின் உருவ பொம்மைகளும் கிடைக்கும்னு கடைபோட்டா செம கல்லா கட்டலாம் //

//@mekalapugazh

ஆமா… நான் கூடத்தான் எவ்வளவோ பேசறேன்…

ஆனால், வாசன் பேசுவதை மட்டுமே ஏன் ஊடகங்கள்

வெளியிடுகின்றன… என்கிறான் வாக்காளன்.//

// ‏@imsivaraina27

அழகான பொண்ணுங்க எல்லாம் நம்மல லவ் பண்ணல. நம்ம ப்ரண்ட்ஸயும் லவ் பண்ணல. அப்டினா யாரதான் லவ் பண்ணுவாங்க…

யாரதான் கல்யாணம் பண்ணுவாங்க //

// Ethir Katchi ‏@sudhanks

Expectations : நீ, நான், மழை, இளையராஜா, லவ் ஃபீவர்!!

Reality : நான், மழை, கொசு, DSP, மலேரியல் ஃபீவர்!! //

// ‏@mekalapugazh

சென்னையில் மழை என்று செய்தி சொன்னால் அரசு ஊடகம்…

தி.நகர், வளசரவாக்கம், போரூர், ஓஎம்ஆர் ரோடு, தாம்பரம் ஆகிய இடங்களில் மழைன்னா தனியார் ஊடகம். //

//@withkaran

தன்னோட பொண்ண சினிமால டான்ஸாட விடுறார்னு அவ்வை சண்முகி கமல்ட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு போன மீனா இன்னைக்கு தெறில அதையே பண்றது முரண். //

////

Karunakaran B

நைட்டு பத்து மணிக்கு மேல பொட்டிக்கடைல நின்னாதான் தெரியுது. நாட்ல எத்தனை கோடி கடலைமிட்டாய் வெறியனுக இருக்கானுகனு. //

//

Syed Khaleel

12 hrs ·

கேட்க தமாஷாக இருந்தாலும். .. உண்மையில் ஒரு வருடம் முன்பு நடந்தது. பிஸியான ஏரியாவில் பணம் எடுக்க ஏடிஎம் வரிசையில் கடைசியில் நின்றுக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் நின்றுக் கொண்டிருந்த நேபாளி நபர் ஒருவர் தன் முறை வரும் போதெல்லாம் அடுத்து நிற்பவரை அனுப்பி விட்டு அவர்கள் பணம் எடுப்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியாக நான் அவருக்கு அடுத்தபடியாக வந்தேன். ஆனாலும் அவர் என்னையும் பணம் எடுக்க சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டார். நானும் பணம் எடுத்துக் கொண்டு “எல்லாரையும் பணம் எடுக்க அனுப்பி விட்டு நீங்கள் நிற்கிறீர்களே…? நீங்கள் பணம் எடுக்க ஏதாவது உதவி செய்யட்டுமான்னு?” கேட்டேன். அதுக்கு அவர் சொன்னது இன்னைக்கு நிணைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் சொன்னது… இல்லே… கார்டை பச்சை கலர் எரிஞ்சதும் மெஷின்ல சொருவனும், எவ்வளவு பணம் வேனும்னு அழுத்துனா கேக்கற பணத்தை மெஷின் தருது. இதுவரையில் புரியுது. ஆனா இந்த கார்டை எங்க விக்கறாங்க? எனக்கு மயக்கம் வராத குறைதான். //�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *