qபொன் மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி!

public

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல், சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றதையடுத்து, அவரைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, பொன் மாணிக்கவேல் பொய் வழக்குகளை போடுவதாகவும், அவரைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி விஜயகுமார் ஆகியோரிடம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புகார் மனு அளித்தனர்.

இதற்கிடையே, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக 66 போலீசார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், “ஓய்வு பெற்ற அதிகாரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசின் வரம்புக்குள் நுழைந்து இது போன்ற சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன் மாணிக்கவேலுவை நியமித்தது தவறு”என தெரிவித்திருந்தனர். அவரது நியமனத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்த மனுவை முன்னதாக விசாரித்த நீதிமன்றம் அவரது நியமனத்துக்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *