nமார்ச் இறுதியில் பேடிஎம் வங்கி தொடக்கம்!

public

ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்றுள்ள பேடிஎம் நிறுவனம் தனது வங்கிச் சேவையை இம்மாத இறுதிக்குள் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் சேமிக்கும் வசதியுடன் தொடங்கப்பட்டதுதான் பேமெண்ட் பேங்க். கடந்த ஆண்டில் பேமெண்ட் பேங்க் சேவையைத் தொடங்குவதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் ஆதித்யா பிர்லா நுவோ, ஏர்டெல் எம். காமர்ஸ் சர்வைசஸ், சோழ மண்டலம் டிஸ்ட்ரிபூஷன் சர்வைசஸ், டிபார்ட்மெண்ட் ஆஃப் போஸ்ட்ஸ், ஃபினோ பேடெக், நேஷனல் செக்யூட்டிரீஸ் டெபாசிடரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, பேடிஎம், டெக் மஹிந்திரா, வோடஃபோன் எம்.பேசா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பேமெண்ட் வங்கி தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முதல் நிறுவனமாக ஏர்டெல் பேமெண்ட் வங்கி ஜனவரி மாதம் தனது சேவையைத் தொடங்கியது.

இந்நிலையில், விஜய் சங்கர் சர்மாவின் பேடிஎம் நிறுவனம் ஏற்கனவே இரண்டு முறை பேமெண்ட் வங்கியைத் தொடங்குவதாக அறிவித்து, சில காரணங்களில் அதன் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் பேடிஎம் நிறுவனம் இறங்கியுள்ளது. எனவே இம்மாத முடிவுக்குள் பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *