iஇன்றைய ஸ்பெஷல்: உடுப்பி பைனாப்பிள் கறி!

public

தேவையானவை

பைனாப்பிள் – ஒரு கப்

புளி – ஒரு சின்ன எலுமிச்சை அளவு

வெல்லம் – ஒன்றரை மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி

*அரைக்க:*

எள் – ஒரு மேசைக்கரண்டி

தேங்காய்த்துருவல் – அரை கப்

காய்ந்த மிளகாய் – 5

*தாளிக்க:*

எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

கடுகு – கால் தேக்கரண்டி

சீரகம் – கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

**செய்முறை**

புளியை ஊற வைக்கவும். வெல்லத்தைத் தயாராக எடுத்து வைக்கவும். பைனாப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி மூழ்கும் அளவு நீரில் வேக விடவும். எள் மற்றும் காய்ந்த மிளகாயை தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்து தேவையான நீர்விட்டு விழுதாக அரைக்கவும்.

பைனாப்பிள் பாதி வெந்ததும் இதில் புளி கரைசல், வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து மூடி வேக விடவும். பைனாப்பிள் முழுவதும் வெந்ததும் அரைத்த விழுது, மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். கறி சற்று திக்கான பதம் வந்ததும் தாளிப்பைச் சேர்த்து எடுக்கவும். சுவையான பைனாப்பிள் கறி தயார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *