Hஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

public

தொப்புள் கொடியிலும் நஞ்சு!

“இது கவலை தரக்கூடிய பிரச்சினை. மாசுபாடு அடைந்துள்ள காற்றைச் சுவாசிக்கும் தாய்மார்களின் கர்ப்பப்பையும் பாதிப்படையும். காற்றுக்கும் கர்ப்பப்பைக்கும் இடையேயான தொடர்பு தவிர்க்க முடியாத ஒன்று. கர்ப்பமான பெண்கள் முடிந்தவரை அதிகம் காற்று மாசுபாடு இல்லாத இடங்களில் பயணிப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது.”

*- லிசா மியாஷித்தா, லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக மருத்துவர்.*

“இனிவரும் ஓர் தலைமுறைக்கு இவ்விட வாசம் சாத்தியமோ..!?”

சாத்தியமில்லை என்றுதான் இப்பாடலுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பிறந்த குழந்தைகள் நாம் ஏற்படுத்திய மாசுகளால் பாதிக்கப்படுவது இயல்பானதொன்றாகிவிட்டது. தற்போது, கருவில் இருக்கும் சிசுவே மாசுபாட்டினால் பாதிக்கப்படுகிறது என்ற ஆய்வு வருத்தமளிக்கிறது. இந்நிலை எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், இவ்வளவு விரைவில் இந்த இடத்திற்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இங்கிலாந்தில் உள்ள ஐந்து தாய்மார்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், ஐந்து பேரின் தொப்புள் கொடியிலுமே நச்சுத்துகள்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் காற்று மாசு! காற்றில் இருக்கும் நச்சுத்துகள்கள் நுரையீரலுள் நுழைந்து உடலின் பல்வேறு பகுதிகளை அடைகின்றன. கர்ப்பிணிப் பெண்களின் கருக்கொடியிலும் இந்த நச்சு வந்து சேர்கிறது. தொப்புள் கொடியை அடையும் துகள்கள் விரைவிலேயே தாயின் கர்ப்பப்பையை அடைந்து, அதைச் சேதப்படுத்தத் தொடங்குகிறது.

முன்னதாக, “காற்று மாசுபாடு குழந்தைகளின் நுரையீரலைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வளரும் மூளைகளை நிரந்தரமாகச் சேதப்படுத்தும். இதனால், அவர்களின் எதிர்காலம்கூடக் கேள்விக் குறியாகும்” என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் அந்தோணி கூறியிருந்தார்.

இந்தியத் தாய்மார்களின் தாய்ப்பாலில் விஷம் இருக்கிறது எனும் செய்தியையே நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலை நீடித்தால் எதிர்காலம் அல்ல, நிகழ்காலமே கேள்விக்குறியாகிவிடும்!

**- நரேஷ்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *