hஎன்னது ‘காவி’ அலர்ட்டா: அப்டேட் குமாரு

public

சச்சின் படத்துல வடிவேலுவை கோர்த்துவிட்டுட்டு விஜய் அப்பீட் ஆவார்ல அது மாதிரிதான் டிடிவி என்ட்ரி கொடுத்துருக்காரு. “ஆயிரம் தான் இருந்தாலும் வர்தா புயலை எங்க ஆளு எப்படி சமாளிச்சாருன்னு தெரியுமான்னு யாராவது நீட்டி முழக்குவாங்கன்னு தெரிஞ்சு தான் அவர் ஆரம்பத்திலேயே ஆட்டையை களைச்சு விட்டுட்டு போயிருக்கார் தம்பி”ன்னு மாஸ்டர் ரொம்ப சந்தோஷமா டீ ஆத்திகிட்டு இருந்தாரு. மழை லேசா தலையை காட்டுனா போதும் மாஸ்டரை கையிலேயே பிடிக்க முடியாது. அந்நேரம் பார்த்து அக்கவுண்ட் சொல்ல நின்னுகிட்டு இருந்த ஒருத்தர், “ரெட் அலர்ட் கொடுத்துட்டாங்க, தண்ணி கடைக்குள்ள வந்திடும்”னு வாட்ஸ் அப்ல இருந்து போன வெள்ளத்துக்கு வந்த போட்டோவையெல்லாம் காண்பிச்சு கடுப்பேத்திவிட்டுட்டாரு. மாஸ்டர் முகத்துல ஈ ஆடலை. இப்ப தான் தெரியுது எப்படி இந்த போட்டோஷாப் மேட்டர்லாம் ஒர்க் அவுட் ஆகுதுன்னு. தெருவுக்கு நாலு பேரு வாட்ஸ் அப்பை பார்த்து ஜோசியம் சொல்லிகிட்டு இருக்காங்க. நீங்க அப்டேட்டை பாருங்க.

**@kathir_twits**

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 2.50 குறைப்பு-செய்தி

நல்லா பாருங்க ஒரு லிட்டர் முழுசா வருதான்னு !

**@yugarajesh2**

தமிழகத்திற்கு ‘ரெட்’ அலர்ட்- செய்தி

-அதுக்கு முன்னாடி ‘காவி அலர்ட்’ கொடுங்க…!!!

**@amuduarattai**

ஹோட்டல்கள் பெருக்கிட்டு போற வேகத்தைப் பார்த்த, இனி நம் வீட்டு சமையலறை அடுப்பில், பூனை தான் படுத்து உறங்கும் போல.

**@sultan_Twitz**

விஜய்யின் படத்தை ஓட வைக்கும் வகையில் கருத்து சொல்ல விரும்பவில்லை – தமிழிசை

மெர்சலுக்கு ஃப்ரீ புரமோஷன் குடுத்ததுலாம் கண்ணு முன்னாடி வந்து போவுமா இல்லியா!!

**@yugarajesh2**

பெட்ரோல் விலை குறையும் முன்னே; ஏதாவது ஒரு மாநிலத்துக்கு தேர்தல் வரும் பின்னே.

**@HAJAMYDEENNKS**

ரெட் அலர்ட் என்பது அரசு நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கொடுக்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கை..அதை இந்த வாட்ஸ்அப்வாசிகள் உலகமே அழிய போற மாதிரி பரப்பிக்கிட்டு இருக்காங்க! சேகுவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் இருக்க பயமேன்

**@gips_twitz**

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் துப்பாக்கி இருந்தது ஆனால் குண்டு இல்லை.- நிர்மலா சீதாராமன்

தூத்துக்குடில 13 பேர சுட்டு கொல்லும் போதே தெரியும் மேடம்…

**@rahimgazali**

தமிழகத்திற்கு ரெட் ஆலர்ட் – செய்தி

இந்த தடவை சிகப்பு கலர்ல ஸ்டிக்கர் அடிப்பாங்க போல…

**வெ. பூபதி**

சமகால அபத்த வாழ்க்கைமுறையிலிருந்து விலக முயற்சிப்பதே பெரும் சவால்!

**@sultan_Twitz**

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்.16- ல் பாராட்டு விழா – செய்தி

எதுக்கு அணைக்கு காய்ச்சல்னு ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டுபுடிச்சதுக்கா..!

**@shivaas_twitz**

முதல் முறை ‘பஃபே’ல சாப்பிடுறவனும், முதல் முறை ‘ஜிம்’க்கு போனவனும் எல்லா ஐட்டத்துலயும் கை வைக்காம வரமாட்டானுங்க..!

**@yugarajesh2**

விஜயை பார்த்து பயப்படும் அளவில் அதிமுக இல்லை- மாஃபா பாண்டியராஜன்

-எங்களுக்கு மோடியை பார்த்தால் மட்டும் தான் பயமுங்க….!!

**@Thaadikkaran**

சாப்டியா என்ற கேள்விக்கு சாப்டேன் என்று பதில் சொன்னவர்களைவிட வாங்கி தர்றியானு கேட்டவர்களே அதிகம்..!

**@mohanramko**

‘இப்படியே தான் வாழ்க்கையை ஓட்டனுமா’ என்ற கவலை, பெட்ரோல் போட்டு வண்டியை ஓட்டும் எல்லோருக்கும் உண்டு

**@WriterRavikumar**

நாய் வாலை வெட்டி நாய்க்கே சூப் வைத்து கொடுப்பது எனக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மத்திய அரசு பெட்ரோல் , டீசல் விலையில் 2.50 குறைப்பதாக சொல்லியிருப்பது அதுதான் !

**@ajmalnks**

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் துப்பாக்கி இருந்தது ஆனால் குண்டு இல்லை.- நிர்மலா சீதாராமன்

பாஜக ஆட்சியில் பிரதமர்ன்னு ஒருத்தர் இருக்கிறார்…ஆனால் அவர் நாட்டிலேயே இருப்பதில்லை-மக்கள்

**@ShivaP_Offl**

ரோட்ல ஹெல்மெட் போட்டுக்கிட்டு அறிமுகமானவர்களை பார்த்து அசால்ட்டா தலையை ஆட்டிவிட்டு போயிடுறாங்க,

யாரா இருப்பாங்கன்னு தெரியாம வீடுபோயி சேரும்வரை நமக்குதான் கன்பூசனா இருக்குது

**@yugarajesh2**

கடந்த காலங்களில் டி.ஆர் தன் திரைப்படங்களில் இடம் பெற நினைத்த நகைச்சுவை காட்சிகளை தற்போது பேட்டிகள் மூலம் காட்சிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *