வடகொரியா: ஒரே நாளில் எட்டு ஏவுகணைகள் பரிசோதனை!

public

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. வடகொரியாவின் இந்த ஏவுகணை பரிசோதனைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. வடகொரியா சந்தித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் இந்த ஏவுகணைகள் பரிசோதனை நடந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் வடகொரியா ஒரே நாளில் எட்டு ஏவுகணைகளை பரிசோதித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் வடகொரியா, தலைநகர் பியாங்யாங் அருகே உள்ள சுனான் பகுதியில் இருந்து 8 குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை 35 நிமிடங்களுக்குள் ஏவி பரிசோதனை நடத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து வடகொரியாவின் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி தென்கொரியா பாதுகாப்பு ஆலோசகர் கிம் சுங் ஹான், வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், “வடகொரியாவின் ஏவுகணைகள் பரிசோதனைகள் குறித்து அனைத்து தகவல்களையும் சேகரிக்க வேண்டும். மேலும் நமது நாட்டு விமானங்கள், கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் கடலில், அமெரிக்காவும், தென் கொரியாவும் மூன்று நாள் கூட்டுப் போர்ப் பயிற்சியை முடித்த ஒரே நாளில் வடகொரியா 8 ஏவுகணைகளை பரிசோதனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.