_23 இடங்களில் வருமான வரித் துறை சோதனை!

public

சென்னையில் தி.நகர், சவுகார்பேட்டை உள்ளிட்ட 23 இடங்களில் உள்ள ஐவுளிக் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் காந்தி பேப்ரிக்ஸ், காந்தி பேஷன்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 23 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே காந்தி பிரதர்ஸ் குரூப் மற்றும் ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் வரி செலுத்தவில்லை என்றும், ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. இதில், 110 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

காந்தி பிரதர்ஸ் குரூப் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கடைகள் மற்றும் உரிமையாளரின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வேப்பேரியில் டாக்டர் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவரது வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *