அமித்ஷாவுடன் கர்நாடக பாஜக தலைவர்கள் சந்திப்பு!

public

கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசு தோல்வியுற்றதைத் தொடர்ந்து குமாரசாமி அரசு கவிழ்ந்துள்ளது. அடுத்து ஆட்சி உரிமை கோருவது தொடர்பாகவும், அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் பாஜக தலைவர் அமித்ஷாவையும், செயல் தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்திப்பதற்காக கர்நாடக பாஜக தலைவர்கள் ஜகதிஷ் ஷெத்தார், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவலி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (ஜூலை 25) டெல்லி சென்றடைந்தனர்.

முதற்கட்ட சந்திப்பில் கர்நாடக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடமும், ஜே.பி.நட்டாவிடமும் கர்நாடக பாஜக தலைவர்கள் விவரித்தனர். இதைத்தொடர்ந்து மதியம் 3 மணிக்கு இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இறுதிகட்டமாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கர்நாடக விவகாரத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜகதிஷ் ஷெத்தார் தெரிவித்துள்ளார்.

மேலும், சபாநாயகருக்கு எதிராக இரண்டு சுயேச்சைகள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் திரும்பப் பெற விரும்புவதாக எம்.எல்.ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். எம்.எல்.ஏக்கள் மனுவைத் திரும்பப் பெற சபாநாயகர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கிறதா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். ஆட்சேபனையில்லை என சபாநாயகர் தரப்பு தெரிவிக்கவும், மனுவைத் திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதியளித்தனர்.

நேற்று (ஜூலை 24) பெங்களூருவிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு எடியூரப்பா சென்றிருந்தார். அங்கு சங் பரிவார் சீனியர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “சங் பரிவாரத்தின் சீனியர் தலைவர்களிடம் ஆசி பெறுவதற்காக வந்தேன். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக டெல்லியின் உத்தரவிற்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். கர்நாடக விவகாரத்தில் பாஜக தலைமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆட்சிக்கு உரிமை கோர அமித்ஷாவின் சிக்னலுக்காக காத்திருக்கிறார் எடியூரப்பா.

**

மேலும் படிக்க

**

**[சசிகலாவின் அருமை இப்போது புரிகிறதா? -அமமுகவின் வீடியோ](https://minnambalam.com/k/2019/07/24/49)**

**[ரூ.200 கோடி சொத்து: முன்னாள் மேயர் கொலைப் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/24/68)**

**[மா.சுப்பிரமணியனுக்கு அரசு வீசும் வலை!](https://minnambalam.com/k/2019/07/24/43)**

**[ டிஜிட்டல் திண்ணை: விஸ்வரூப வேலுமணி- அலர்ட் ஆகும் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/24/77)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *