6பிழை மறை குற்றங்கள்!

public

ஒரு கப் காபி!

கேம் ஆஃப் திரோன்ஸ் சீரிஸ், இன்னிக்குப் பல விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தாலும், புத்தகத்துல அது எப்படி ஒரு கிளாஸிக்கா இருந்ததோ, அதேமாதிரி சீரிஸ் வகையறாக்களிலும் ஒரு அல்டிமேட் டிரேட் மார்க்கா என்னிக்கும் இருக்கும். காரணம், மனித வாழ்வியலுக்கு அது சொல்லிக்கொடுத்த விஷயங்கள். குறிப்பா ஒண்ணு சொல்றேன்.

ராஜ்ஜியத்தை ஆட்சி செய்பவரின் முறையில்லாத மனைவிக்குப் பிறந்திருந்த ஒரே காரணத்துக்காகப் பல துன்பங்களை அனுபவித்த ஜான் ஸ்னோ எல்லா பந்த பாசத்தையும் விட்டுட்டு, குற்றவாளிகளையும், அரசுக்கு எதிரானவங்களையும் அடைத்து வைக்கும் எல்லையோரக் காவல் படைக்குப் போயிடுறார். விருப்பப்பட்டுப் போனாலும், அவர் எந்த பந்த பாசமும் வேண்டாம்னு சொல்லிட்டுப் போறார்.

ஆனால், அங்கே போனதும் முன்னெப்போதையும்விடப் பல சொந்தங்கள் கிடைக்குது. சொந்தங்கள் உருவாக்குற அளவுக்கு அங்கே இருக்கவங்களோட மனதை மாத்துறவர் கண்ணு தெரியாத ஒரு பெரியவர். அங்கே இருக்கும் ஒவ்வொரு வீரனும் ஏதாவது ஒரு காரணத்துக்குத் தண்டிக்கப்படும்போது, அந்தக் குற்றம் ஏன் நடந்தது, இனி அப்படிப்பட்ட சூழல்ல எப்படி நடந்துக்கணும்னு எல்லாருக்கும் சொல்வதை வழக்கமா கொண்டிருக்கார்.

அவருடன் பழகும் காலத்துல ஜான் ஸ்னோவுக்குப் பல விஷயங்கள் புரியுது. அதுல ஒண்ணு, பொய்யினால் கிடைக்கும் எந்த நல்லதும் ஒரு காலத்துல ஆபத்தா மாறும் என்பதுதான். அதையே வேத வாக்காகக் கொண்டு செயல்படும் ஜான் ஸ்னோவுக்கு, ஒரு கட்டத்துல அந்தப் பெரியவர்தான் இப்போது அரியணையில் அமர்ந்து ஆட்சி நடத்த வேண்டியவர் என்று தெரியவருது. ‘ஆட்சிக்காக சண்டை போட்டு உயிரை விடுறதைவிட, உயிரோட இருந்து அடுத்த அரசர்கள் எப்படி நடந்துக்கணும்னு மற்றவர்களுக்குச் சொல்லித் தர்ற வேலை ரொம்ப முக்கியமானது’ என்று அவர் சொல்வது ஜான் ஸ்னோ மனசுல ஆழமா பதியுது.

இப்படிப்பட்ட விஷயங்களைக் கேட்டு அறிவை வளர்க்கும் ஜான் ஸ்னோ, ஒரு கட்டத்துல அந்த இடத்தையே தன்னுடையதாக மாற்றி, அங்கே இருந்து வெளியேவந்து அரியணையில் உட்காரும் அளவுக்குத் தன்னை வளர்த்துக்கிட்டாலும், விதை அந்தப் பெரியவர் போட்டது.

இப்படிப் பல விஷயங்களை நமக்குச் சொல்லிக்கொடுத்தவங்க பக்கத்துல இருக்கும்போது அவங்க அருமை நமக்கு புரியாது. அவங்களை ‘குறை கண்டுபிடிப்பவர்கள்’ என்ற வட்டத்துக்குள் நிக்க சொல்லிட்டு, நாம வெளிய வந்து நின்னுக்குவோம். ஒரு கட்டத்துல நமக்கே இடமில்லாமல் காணாமல் போய்டுவோம்.

இப்ப இந்த விஷயத்தை, கேம் ஆஃப் திரோன்ஸ் சீரிஸ்ல இருந்து உருவிக்கிட்டு வந்து உங்களுக்கு சொல்ற ஒரே காரணத்தால, இதுல இருக்கும் சில எழுத்துப் பிழைகளை கண்டுகொள்ளாமல் விடுங்கன்னு சொன்னா அது நியாயமா? அடிச்சதே காப்பி; அதைச் சொல்லிட்டு இதுல எழுத்துப் பிழையைக் கண்டுக்காம போகச் சொல்றியா என்று என்னைக் கண்டிச்சுதானே ஆகணும்? இதைச் சரிப்படுத்தி என்னைக் காப்பாற்றுபவர்களை நான் எப்படி மதிக்கணுமோ, அந்த மாதிரி உங்க வாழ்க்கையில் நடக்கும் குற்றத்துல இருந்து காப்பாற்றுவங்களை உங்க வாழ்க்கைல கிடைச்ச வைரம்போலப் போற்றி வாழ்ந்தா வாழ்க்கை ஜொலிக்கும்.

**- காபிக்காரன்**

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://minnambalam.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://minnambalam.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/18/7)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://minnambalam.com/k/2019/05/18/52)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *