qசிபிஐக்கு மாறிய சிலைக் கடத்தல் வழக்குகள்!

public

சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக, இன்று (ஆகஸ்ட் 1) சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வின் முன்பு நடந்த விசாரணையின்போது, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்படவில்லை என்று தமிழக அரசின் சார்பாகப் பதில் தெரிவிக்கப்பட்டது. ஓராண்டு ஆனபின்பும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் அரசுக்கு இதுவரை ஒரு அறிக்கை கூட வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன்.

சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்றும் அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் பதிலளித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், மாநில காவல் துறை மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பினர். “காவல் துறையினர் விசாரணை நடத்தியவரை, ஒழுங்காகப் பணிகள் நடைபெற்றது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்த பிறகுதான் விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை; அதன் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று தமிழக அரசின் சார்பாகக் கூறினார் அரவிந்த் பாண்டியன்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தன்னிடமுள்ள ஆவணங்களைப் பெற மட்டுமே தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறினார் ஐஜி பொன்.மாணிக்கவேல். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தலைத் தடுக்கும் வகையில் தமிழகத்திலுள்ள கோயில்களில் பாதுகாப்பு அறைகள் கட்ட 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் கோரியது தமிழக அரசு. இதனைக் கேட்ட நீதிபதிகள், அவ்வளவு கால அவகாசம் தர முடியாது என்று கூறினர். கோயில் சிலைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும் மெத்தனம் காட்டி வருவதாகவும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையிலேயே, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிஐ வசம் மாற்றப்படுவதாகப் பதிலளித்துள்ளது தமிழக அரசு.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *