மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

கிச்சன் கீர்த்தனா: நெத்திலி கருவாட்டுக் குழம்பு (ஆடி ஸ்பெஷல்)

கிச்சன் கீர்த்தனா: நெத்திலி கருவாட்டுக் குழம்பு (ஆடி ஸ்பெஷல்)

ஆடி மாதத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் கோயில் திருவிழாக்களின்போது கூழுக்கு சைடிஷ்ஷாக வழங்கப்படுவது இந்த நெத்திலி கருவாட்டுக் குழம்பு. இதை இந்த வார சண்டே ஸ்பெஷலாக எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் கருவாடு - 30

புளி – 1 எலுமிச்சை அளவு

வாழைக்காய் - பாதி அளவு ( பொடியாக நறுக்கியது )

தோல் நீக்கிய மாங்காய் - பாதி அளவு ( பொடியாக நறுக்கியது)

முருங்கைக்காய் - 1 ( பொடியாக நறுக்கியது)

முள்ளங்கி - 1 ( வட்டமாக நறுக்கியது )

உருளைக்கிழங்கு - 1 ( பொடியாக நறுக்கியது)

கத்திரிக்காய் - 1 ( பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் - 8 ( பொடியாக நறுக்கியது)

கறிவேப்பில்லை - சிறிதளவு

மரசெக்கு நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

மசாலா அரைக்க

தேங்காய்த் துருவல் - கால் கப்

பச்சை மிளகாய் - 4

பூண்டு – 4 பல்

சீரகம் - அரை டீஸ்பூன்

முழு முந்திரிப் பருப்பு - 8

சின்ன வெங்காயம் - 6

செய்முறை

1. முதலில் புளியை நன்றாக வெதுவெதுப்பான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

2. கருவாடை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். கருவாட்டின் தலைகளை ஆய்ந்துவிட்டு, மூன்று முறை தண்ணீரைக் கொண்டு அலசிக்கொள்ளவும்.

3. இப்பொழுது வாணலியில் மரச்செக்கு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும். பொடியாக நறுக்கி வைத்துள்ள அனைத்துக் காய்கறிகளையும் அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

4. பிறகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் கருவாடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

5. அதன்பின், வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்துள்ள புளியைக் கரைத்து புளிக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

6. இப்போது அந்தப் புளிக் கரைசலை வாணலியில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி மெல்லிய சூட்டில் கொதிக்கவைக்க வேண்டும்.

7. அதன் பின், மிக்ஸியில் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் கொஞ்சமாகக் குளிர்ந்த நீர் ஊற்றி விழுதாக நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

8. வாணலியின் மேல் ஒரு தட்டு மூடி, காய்கறிகளும் கருவாடும் நன்கு வேகும்வரை பொறுமை காக்கவும். இதற்கு 10 -12 நிமிடங்கள் எடுக்கும்.

9. கருவாடும் காய்கறிகளும் வெந்துவிட்டது என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை வாணலியில் சேர்த்து நன்கு மெல்லிய தீயில் கொதிக்க வைக்க வேண்டும். தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018