சிலருக்கு முழங்கைகள் கருமையாக இருக்கும். குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருமை அகலாது. சிலர், சந்தையில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ப்பார்கள். ஆனால், அந்த சந்தை தயாரிப்புகள் தற்காலிகமாக நிவாரணம் தருமே தவிர, நிரந்தரமான தீர்வை தராது. இந்த நிலையில் முழங்கைகளில் உள்ள கருமை மறைய, வீட்டிலேயே கிடைக்கும் எளிய தீர்வு இதோ…
ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சைப் பழத்தை வெட்டி சாறு எடுத்து அதனுடன் கலக்கவும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்த பிறகு, வெட்டிய எலுமிச்சையை அதில் தோய்த்து முழங்கையில் உள்ள கருமையான பகுதிகளில் தேய்க்கவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அதை உலர விடவும்.
தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து முழங்கையை சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்து வந்தால் முழங்கைகளில் உள்ள கருமை மறையும். மேலும் சருமம் மென்மையாகும். எந்த வகையான சரும நோய் தொற்றையும் தடுக்கும் ஆற்றல் கடலை மாவுக்கு உண்டு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பப்பட் ரோல்
கடைசியில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டேனே: அப்டேட் குமாரு
கடைசி பஸ்ஸை மிஸ் செய்ததால் கிடைத்த கதை… யார் இந்த ‘பசி’ துரை
சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் குஷ்பு- என்னாச்சு உடம்புக்கு?