செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனமாக இன்ஃபோசிஸ் உருவாகியுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சலில் பரேக் தெரிவித்துள்ளார்.
ஐடி தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் இன்ஃபோசிஸ், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் கோடிங் பணிகளுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
ஜென் ஏஐ என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக மிகப்பெரிய கணினி மொழி மாதிரிகளை பயன்படுத்தி மூன்று மில்லியன் குறியீடுகளை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்காக அந்நிறுவனத்திற்கு ஐஎஸ்ஓ 42001-2023 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை உறுதி செய்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக், உலக அளவில் இந்த சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் உருவாகி இருப்பதாகவும் இதன் மூலம் செயற்கை தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கான தங்களின் உறுதிப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தரவுகளுடன் கூடிய தீர்வுகளை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் தங்களின் பணித்திறன் அதிக அளவில் மேம்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் குறித்த தகவல்களை சலில் பரேக் வெளியிடவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: முந்திரி சாக்கோ ரோல்
டிஜிட்டல் திண்ணை: பங்குபோடும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன்… ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய South