பொதுவாக, நோயாளிகளுக்குத்தான் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை உண்ணக் கொடுக்க வேண்டும் என்ற தவறான புரிதல் நம்மில் பலரிடம் நிலவி வருகிறது. இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வது நல்லது. இவை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களை அனைவருமே உண்ண வேண்டும். உடனடி ஆற்றல் கொடுக்கும் இந்தப் பழங்களில் பொட்டாசியம், சோடியம் மற்றும் வைட்டமின் – சி போன்றவை நிறைந்துள்ளன.
இந்தக் கோடைக்காலத்தில் மற்றுமொரு சிட்ரஸ் பழமான எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ள நாம் தவறக்கூடாது. தினமும், ஐஸ் போடாமல் எலுமிச்சை ஜூஸை பருகலாம். எலுமிச்சையில் உள்ள புளிப்புக்கு மாற்று இனிப்பு என்றாலும், அது வெள்ளை சர்க்கரையாக இல்லாமல் பனை வெல்லமாக இருப்பது நலம் பயக்கும்.
எலுமிச்சை ஜூஸில் உப்பு மற்றும் பனை வெல்லம் ஆகிய இரண்டையும் சேர்த்துப் பருகினால் வெயிலினால் உண்டாகும் நீரிழப்பைத் தடுக்கலாம். எலுமிச்சை, பித்தத்தை தெளிய வைக்கும் இயல்பு கொண்டது என்பதால் இதை கோடைக்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தத் தவறக் கூடாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பப்பட் ரோல்
ஆண்டுக்கு 650 கோடி கொள்ளை? அரசு ஊழியர் இன்சூரன்சில் மோசடி!
பிக்பாஸ்க்கு பிறகு புதிய சீரியலில் களமிறங்கிய வினுஷா தேவி
செந்தில் பாலாஜிக்கு எதிரான ED வழக்கு: தீர்ப்பு எப்போது?