மளிகைக் கடையில் கருக்கலைப்பு: போலி மருத்துவர்கள் கைது!

public

திருவண்ணாமலையில் மளிகைக்கடை ஒன்றில் கருக்கலைப்பு செய்துவந்த தம்பதியரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஈசானிய லிங்கம் அருகே காவியன் ஜெனரல் ஸ்டோர் எனும் பல்பொருள் அங்காடி உள்ளது. இதனை கவிதா, பிரபு தம்பதியர் நடத்தி வந்தனர். 10ஆம் வகுப்பு முடித்துள்ள கவிதா, ஏற்கனவே சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்த புகார்களின் அடிப்படையில் பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.

கடந்த 28ஆம் தேதியன்று மாலை கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கவிதா மற்றும் பிரபுவைத் தேடி வந்தனர். கருக்கலைப்பு செய்வதற்காக வந்தபோது, அவர்களை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி ஆகியோர் அந்த கடையில் சோதனையிட்டனர். அப்போது, அந்த கடையின் உள்ளே படுக்கைகள் மற்றும் மருத்துவக் கருவிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அக்கடையின் ஒரு பகுதியிலேயே கவிதா கருக்கலைப்பை மேற்கொண்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்த உபகரணங்களைக் கைப்பற்றிய போலீசார், அந்த இடத்துக்கு சீல் வைத்தனர். கவிதா – பிரபு தம்பதியர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் சேர்ந்து சுமார் 4,000க்கும் அதிகமான பேருக்குக் கருக்கலைப்பு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மென்பொருள் மூலமாக, அப்பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. ஆனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதற்கான ஆவணங்கள் இல்லாத நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதன்முடிவிலேயே, கவிதாவும் பிரபுவும் சிக்கியுள்ளனர்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/30/18)

**

.

**

[என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?](https://minnambalam.com/k/2019/05/30/23)

**

.

**

[காங்கிரஸ் தலைவராக தலித்?](https://minnambalam.com/k/2019/05/30/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/29/85)

**

.

**

[துரைமுருகனுக்கு என்னாச்சு?](https://minnambalam.com/k/2019/05/29/59)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *