மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 மே 2019

முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!

முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!

மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்கள் என இந்தியா முழுவதும் பாஜகவினர் வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் பாஜக எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிபெற முடியவில்லை. தமிழகத்தில் ஓர் இடம்கூட கிடைக்கவில்லையே என்று வருத்தத்திலிருந்து வருகிறார்கள் பாஜகவினர். இந்த நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்புகள் பல இடங்களில் நடைபெற ஆரம்பித்துள்ளது.

முதல்வரின் மாவட்டமான சேலம் மின்னாம்பள்ளியிலுள்ள ஏவிஎஸ் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல் வடதமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 இளைஞர்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதுபோலவே தென்தமிழகத்திலும் பயிற்சிகள் நடைபெறுகின்றன.

பயிற்சி வகுப்புகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள விசாரணையில் இறங்கினோம்...

“தலித், வன்னியர், கவுண்டர் சமூக இளைஞர்களைக் குறிவைத்து தேர்வுசெய்து கருத்தியல் பயிற்சிகளை வழங்கி வருகிறது ஆர்எஸ்எஸ். குறிப்பாக விசிகவில் முன்பு தீவிரமாகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகள், வன்னியர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இளைஞர்கள் போன்றோரைத் தேர்வுசெய்து அவர்களைப் பயிற்சி வகுப்புக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு மூன்று பேர் வகுப்பு எடுக்கிறார்கள். காலையில் சத்தான கஞ்சி, பால். மதியம் அருமையான சைவ உணவுகள். இரவில் சப்பாத்தி, உப்புமா போன்றவை பரிமாறப்படுகின்றன.

இளமையின் வேகத்தோடு அங்கு வந்திருக்கும் இளைஞர்களுக்கு ஆன்மிகம், யோகா, இந்து, இந்துத்துவம், தேசம் எனக் கூறி முதலில் மென்மையாகப் பயிற்சி அளித்து வந்தவர்கள் தற்போது அதன் வேகத்தை அதிகரித்துவருகிறார்கள்.

‘நமக்கு யாரும் தலைவர்கள் இல்லை. இங்கே வந்திருக்கும் நீங்கள் அனைவரும் தலைவர்கள்தான். நாம் ஒன்றுசேர்ந்து இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும். மீண்டும் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு அடிமையாக வேண்டாம். இந்தியாவை உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறோம். நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்’ என்று அவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். சாதி ரீதியாகப் பிளவுபட்டிருக்க வேண்டாம். அனைவரும் இந்துக்களாக ஒன்று சேருவோம் என்ற முழக்கத்தையும் அவர்கள் மத்தியில் வைத்துவருகிறார்கள்.

முகாமிற்கு ஆர்எஸ்எஸ் வடதமிழகம் தலைவர் ரவிக்குமார் மற்றும் கொச்சின் வன்னியராஜா, குரு சுப்பிரமணியன் போன்றவர்கள் வந்துசெல்கிறார்கள். பயிற்சி நேரங்கள் முடிந்ததற்கு பிறகான இடைவேளை நேரங்களிலும், இடைவேளை மற்றும் இரவு நேரங்களிலும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் பயிற்சிக்கு வந்துள்ள இளைஞர்களிடம் நெருக்கமாகப் பேசி அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்யவும் வழிகாட்டுகிறார்கள்.

பயிற்சி நேரங்களில் செல்போனுக்கு அனுமதியில்லை. பயிற்சி முடிந்து அறைக்கு வந்த பிறகுதான் செல்போன் பயன்படுத்த வேண்டும். ஏழு நாட்கள் பயிற்சியை முடித்த பிறகு இவர்கள் அனைவரும் தத்தமது பகுதியில் பாஜகவை வளர்ப்பதற்காகக் களமிறக்கப்படவுள்ளனர்.

குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தி, ‘தேர்தல் நேரத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்றப் பதவியும் பொறுப்பும் தேடிவரும். உங்கள் உறவினர், நண்பர்களுக்கு அரசு ரீதியான உதவிகளைச் செய்து கொடுங்கள். அதற்கு நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உதவி செய்வார்கள்’ என்று அவர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்திவருகிறார்கள்.

தமிழகத்தில் தாமரையை மலரவைப்பதற்கான தொலைநோக்கு திட்டம்தான் தற்போது நடைபெற்றுவரும் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்புகள் என்கிறார்கள் பாஜக பிரமுகர்கள்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

.

துரைமுருகனுக்கு என்னாச்சு?

.

நாங்குநேரியில் பீட்டர் அல்போன்ஸ்?

.

96 ஜானுவும் இளையராஜாவின் புரிதலும்!

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

வியாழன் 30 மே 2019