`மகனுடன் மலைக் கள்ளனான விஜய்சேதுபதி

public

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள சிந்துபாத் திரைப்படத்தின் ராக்ஸ்டார் ராபர் பாடல் வெளியாகியுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் அருண் குமார் இயக்கும் மூன்றாவது படமான சிந்துபாத்திலும் நாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. கதாநாயகியாக அஞ்சலியும், விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவும் படத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பாக எஸ்.என்.ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரிக்கின்றனர்.

தென்காசிப் பகுதியில் விஜய்சேதுபதியும், அவரது மகன் சூர்யாவும் சின்னச் சின்ன திருட்டில் ஈடுபடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழைகளிடம் திருடமாட்டோம் என்ற கொள்கையுடன் செயல்படும் அவர்கள் தாங்கள் திருடிய பணத்தை அவர்களுக்கு மறைமுகமாக வழங்குகின்றனர். ராகுல் ராஜ், பாவ் பண்டி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

மே மாதம் 16ஆம் தேதியே இப்படம் வெளியாக இருந்த நிலையில், பின் தள்ளிப்போனது. இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையைக் ‘கிளாப் போர்டு புரொடக்சன்ஸ்’ சத்யமூர்த்தி வாங்கியுள்ளார். விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஏ.ஆர்.மோகன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

[ராக்ஸ்டார் ராபர் பாடல்](https://www.youtube.com/watch?v=tNjEcfwubOE)

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[மோடி அமைச்சரவையில் தமிழகம் இடம் பெறுமா?](https://minnambalam.com/k/2019/05/30/29)

**

.

**

[முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/30/18)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/29/85)

**

.

**

[என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?](https://minnambalam.com/k/2019/05/30/23)

**

.

**

[துரைமுருகனுக்கு என்னாச்சு?](https://minnambalam.com/k/2019/05/29/59)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *