தாஜ்மஹால் கோயிலா? ஏ.எஸ்.ஐ. விளக்கம்!

public

‘உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹால் கோயில் அல்ல; வெறும் கல்லறை மட்டுமே’ என்று தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது தாஜ்மஹால். முகாலய மன்னன் ஷாஜகானால் கட்டப்பட்ட இது, அதன் கட்டமைப்புக்காக இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது. இந்த நிலையில், ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆறு வழக்கறிஞர்கள் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது. அதன்மீதுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்துக்கள் தாஜ்மஹால் உள்ளே சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.

2015 ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் ஏ.எஸ்.ஐ. எனப்படும் தொல்பொருள் ஆய்வுத்துறை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது. 2015 நவம்பரில் இதுதொடர்பாக மக்களவையில் விளக்கமளித்த கலாசார அமைச்சகம், ‘தாஜ்மஹால் கோயில் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை’ என்று தெரிவித்தது.

நீதிமன்றத்தில் இதுதொடர்பான தனது பதிலைத் தொல்பொருள் ஆய்வுத்துறை கடந்த வியாழனன்று தாக்கல் செய்தது. அதில், ‘தாஜ்மஹால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருந்துவருகிறது. அங்கு சிவன் கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும், அந்த இடம் அபகரிக்கப்படவில்லை. ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து பரிமாற்றமாகப் பெறப்பட்டுள்ளது. எனவே, அங்கு சிவன் கோயில் இருந்தது என்பது கற்பனையான ஒன்று’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *