சிறுமிகள் கொலையை கண்டுகொள்ளாத அரசு : மத்திய அமைச்சர்!

public

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல் அறிக்கையில் 500 மதுக்கடைகளை மூடுவது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறி இருந்தார். தற்போதைய முதலமைச்சர் அது பற்றி தனது முதல் அறிக்கையில் குறிப்பிடுவார் என்று எதிர் பார்த்தேன். அதுபற்றிய அறிவிப்பு வெளிவரவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழக சட்டசபையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் நடந்து கொண்டது ஏற்புடைய தல்ல. தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் தேர்ந்து எடுக்கப்பட்ட இரு கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் நடந்து கொண்டனர். இது சட்ட சபை வரலாற்றில் பெரிய அவமானத்தை இருகட்சிகளும் ஏற்படுத்திவிட்டன. தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை-கொலை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.சட்டசபையில் யாருக்கு வேஷ்டி இருக்கிறது, யாருக்கு சட்டை இருக்கிறது என்று கூட தெரியவில்லை. இந்த நிலையில் சிறுமிகள் கொலை மற்றும் பெண்கள் வன்கொடுமை நடந்ததை பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *