.எம்.ஜி.ஆர் நாணயம்!

public

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அவரது உருவம் பதித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்-ன் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் அணியினராலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(ஜூலை 26-ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று நான் தமிழக முதல்வராகப் பதவிவகித்தபோது, கடந்த ஜனவரி 5-ஆம் தேதியன்று மத்திய அரசுக்குத் தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தேன்.

மத்திய அரசு எனது வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர்-ன் நூற்றாண்டு விழாவில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஒப்புதல் கடிதம் எனக்கு அனுப்பியுள்ளது. எனவே, எம்.ஜி.ஆர்-ன் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *