|இந்துக்களை அவமதிக்கும் நெட்பிளிக்ஸ்: சிவசேனா

public

நெட்பிளிக்ஸ் உலகளவில் இந்தியா மீதும் இந்துக்கள் மீதும் தவறான சித்திரத்தை உருவாக்குகிறது என சிவசேனா ஐ.டி. பிரிவு மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது.

சிவசேனா ஐ.டி.பிரிவு உறுப்பினர் ரமேஷ் சோலங்கி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல *நெட்பிளிக்ஸ்* ஆன் -லைன் ஒளிபரப்பு தளத்தின் மீது புகார் ஒன்றை இன்று(செப்டம்பர் 4) அளித்துள்ளார். *சேக்ரட் கேம்ஸ்*, *லெய்லா*, *கெளல்* ஆகிய வெப் சீரியஸ்களையும், ஸ்டாண்ட்-அப் காமெடியனான ஹசன் மின்ஹாஜின் *பேட்ரியாட் ஆக்ட்* நிகழ்ச்சியையும் குறிப்பிட்டு, ‘நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு தொடரும் உலக அளவில் இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் உள்ளது’ என புகார் அளித்துள்ளார்.

சோலங்கி அளித்துள்ள புகாரில், “இந்து மதம் மீது மிக ஆழமான பயத்தை வேரூன்றும் வகையில், நெட்பிளிக்ஸ் இந்தியாவை தவறான வெளிச்சத்தில் சித்தரிக்கிறது. மேற்கூறிய உள்ளடக்கங்களை ஆராய்ந்து, தங்கள் குழுவை வரவழைத்து, அவர்களின் உரிமங்களை ரத்துசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்து மத நம்பிக்கைகளை காயப்படுத்தியதற்காக நெட்பிளிக்ஸ் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இப்புகாரில் கூறப்படும் சேக்ரட் கேம்ஸ், லெய்லா ஆகிய தொடர்கள் தூய்மைவாதத்தின் எதிர்காலம், மதம் மக்களுக்குள் ஏற்படுத்தும் வன்முறை, பிரிவினை ஆகியவற்றை பேசு பொருளாக கொண்ட தொடர்களாகும். இந்த தொடர்களுக்கு இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ](https://minnambalam.com/k/2019/09/04/26)**

**[‘ஸ்டாலின் – கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி – கன்றுக்குட்டி’ – ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி](https://minnambalam.com/k/2019/09/04/18)**

**[தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!](https://minnambalam.com/k/2019/09/03/46)**

**[சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!](https://minnambalam.com/k/2019/09/04/24)**

**[பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!](https://minnambalam.com/k/2019/09/03/40)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *