மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 செப் 2019

சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!

சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள் என 84 இடங்களில் 2017ஆம் ஆண்டு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் டெல்லியில் உள்ள சிவக்குமாருக்குச் சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அமலாக்கத் துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத் துறை கடந்த ஆண்டு சம்மன் அனுப்பியது. சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் தாக்கல் செய்த மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிவக்குமாருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது.

இதை ஏற்று கடந்த 30ஆம் தேதி டெல்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான சிவக்குமாரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விசாரணைக்குப் போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் டி.கே.சிவக்குமாரை நேற்று (செப்டம்பர் 3) இரவு அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது சிபிஐ காவலில் இருந்துவருகிறார். இந்த நிலையில் காங்கிரஸின் மற்றொரு தலைவரான சிவக்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டபோது, மகாராஷ்டிராவில் இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்து மீட்டுவர மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் அவரின் கைது பழிவாங்கும் நடவடிக்கைதான் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகள் மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றை திசை திருப்பும் மற்றொரு முயற்சியாகத்தான் சிவக்குமாரின் கைது அமைந்துள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை கைது செய்வதற்கான மிஷனில் இறுதியாக வெற்றியும் பெற்றுவிட்ட பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை. நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை என்பதால் மனமுடைய வேண்டாம் என்று எனது கட்சியினரிடமும் நலம் விரும்பிகளிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

புதன் 4 செப் 2019