மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி

‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி

ஒரு தலைவரின் வெற்றியை அவரால் தனித்து நிர்ணயம் செய்ய முடியாது. அதை அவரைச் சுற்றியுள்ள மனிதர்கள், சூழல், காலம், நேரம் இவை அனைத்தும் நிர்ணயிக்கிறது.

மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பதவியேற்று ஒரு வருடம் ஆகும் இந்தச் சூழலில், அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெற்ற வெற்றியைவிட துணிச்சலான மிகப்பெரிய ஒரு வெற்றியை அடைந்துள்ளார். தேர்தல் களத்திலும் கருணாநிதி பெறாத வெற்றியை மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். கருணாநிதி, ராமதாஸ் போன்றவர்கள் மிரட்டல் தொனியில் பேசும்போது மனவலிமையை இழந்துவிடுவார். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்லர். ஸ்டாலின் இத்தனை வருடங்கள் கங்காரு குட்டியாகவே கட்சியிலிருந்து வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு ஒரு கன்றுக் குட்டியாகத் துள்ளி வந்தார்.

தேர்தலில் அமோக வெற்றி பெற்றவர் ஸ்டாலின். எடப்பாடியால் அந்த வெற்றியை ஏன் பெற முடியவில்லை? அதற்குக் காரணம் என்ன... ஸ்டாலினின் ஒரு வருட கால ஆட்சி எப்படியானது... எடப்பாடி பழனிசாமியின் திறமை என்ன... வேலூர் மக்களவைத் தேர்தலின் எதிர்பாராத முடிவுக்கான காரணம் எது... ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே எதனால் மனக்கசப்பு ஏற்பட்டது... இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடையளிக்கிறார், எளிய மக்களுக்கும் அரசியலை அவர்கள் பாணியில் விளக்கவைக்கும் அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி. முழு வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


புதன், 4 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon