மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 செப் 2019

பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!

பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!

-ஸ்பிளாக்கர்

பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்தப்பக்கம் கொண்டுபோவது என்று தெரியாமல், எல்லா பக்கத்திலும் அம்புகளை வீசிக்கொண்டிருக்கிறார் பிக் பாஸ். அதில் ஒரு அம்பு மட்டும் தலையைச் சுற்றி வந்து பிக் பாஸையே தாக்கிவிட்டது.

வீக்-எண்ட் எபிசோட்களில் கமலால் கூட எதுவும் செய்யமுடியாமல், ஒப்பேத்திவிட்டுச் சென்றபிறகு ஓப்பன் நாமினேஷன் வைத்து தன்னை தற்காத்துக்கொள்ள நினைத்தார் பிக் பாஸ். அதில் சரியாக விளையாடத் தொடங்கினார் வனிதா.

ஏற்கனவே பல வெற்றிகள் பார்த்த சேரனுக்கும், ஷெரினுக்கும் இந்த வெற்றி தேவையில்லாத ஒன்றென நினைப்பதாகக் கூறி அவர்களை நாமினேட் செய்துவிட்டு அமர்ந்தார் கவின்.

எப்படி எப்படியோ இருக்கவேண்டிய கவின், இப்படி பெண்கள் பிரச்சினையினால் தன் தனித்தன்மையை இழக்கிறானே என்று கூறி கவினையும், லாஸ்லியாவையும் நாமினேட் செய்தார் சாண்டி. இதில் வனிதா கோபப்படவோ, ஆத்திரப்படவோ காரணமே இல்லையென்றாலும், அவர் துணுக்குற்றார்.

என்னடா ஆளாளுக்கு அழுகுறீங்க? இங்க என்ன கொடுமையா நடக்குது? என்று கேட்டு இஷ்டத்துக்கும் அடித்துவிடத் தொடங்கினார். வனிதாவுக்கும், கவினுக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய வாக்குவாதத்தில், ஒரு கட்டத்தில் மக்களை கவின் இன்ஃப்ளூயன்ஸ் செய்வதாக வனிதா கூறினார்.

மக்களின் மனது பற்றி வனிதா பேசியதால் கவின் ஒரு கோணத்தில் இதை அணுகினார். ‘மக்கள் வேண்டாம்னு தூக்கிபோட்ட உங்களை, பிக் பாஸ் திரும்ப கொண்டுவந்ததே தப்பாச்சேன்னு கூட மக்கள் நினைப்பாங்க இல்லையா?” என்று கேட்டதும் வனிதா லாக் ஆகிவிட்டார். ஆனால், கொஞ்சம் வெளியே காற்று வாங்கிவிட்டு சுதாரித்துக்கொண்டவர் திரும்ப உள்ளே வந்தார். அப்போது கவின், லாஸ்லியா என இருவர் சேர்ந்துகொண்டதால் சரசரவென தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார். அப்போது “நானும் ஒரு கண்டெஸ்டண்டா உள்ள வந்தேன். ஒரு கால கட்டத்துல எனக்கு வெளியேற வேண்டிய சிச்சுவேஷன். அவங்க சொன்ன ரூல்ஸை ஃபாலோ பண்ணி நான் கரெக்டா வெளிய போய்ட்டேன். என் லைஃபை ஹோல்ட்ல போட்டு, திரும்ப அவங்க கூப்பிட்டதும் எல்லாத்தையும் பாஸ் பண்ணிட்டு திரும்ப வந்திருக்கேன்” என்று கூறினார். வனிதா முதல் முறை எலிமினேட் ஆனபோது அவர் மீதான வழக்கு ஒன்றுக்கு போலீஸ் அவரை அழைத்துச்சென்று நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது என்பதை மக்கள் அறிவார்கள்.

பிக் பாஸ் வீட்டுக்குள் போலீஸ் நுழைந்துவிடும் எனப் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தான் வனிதா மக்களின் ஓட்டுகளை குறைவாக வாங்கியதாகச் சொல்லி வெளியேற்றப்பட்டார். வனிதா வெளியேற்றப்பட்டது, பிக் பாஸ் வீட்டின் கண்டெஸ்டண்ட்ஸ் முதல் ரசிகர்கள் வரை பலருக்கும் அதிர்ச்சி தான். வனிதா வெளியேறியதும் ‘இவ்வளவு பெரிய ஆளையே சட்டுன்னு தூக்கிட்டாங்களே. நம்மளாம் எம்மாத்திரம்’ என ஃப்ரூட்டி மூலையில் உட்கார்ந்து கவின் யோசித்துக்கொண்டிருந்ததை இங்கு நினைவு கூரவேண்டும்.

இப்போது கவினுக்குத் தோன்றிய கேள்வி தான், ‘கெஸ்ட் வருகிறார்கள்’ எனச் சொல்லி வனிதாவை உள்ளே அனுப்பி, அப்படியே அவரை உள்ளே தங்கவைத்த போது பிக் பாஸை நோக்கி எழும்பிய மக்களின் கேள்வியாக இருந்தது.

மக்களால் வெளியேற்றப்படும் ஒருவரை நிகழ்ச்சியின் சுவாரசியத்துக்காக பிக் பாஸ் மீண்டும் உள்ளே அனுமதித்தால், இதற்காக உட்கார்ந்து ஓட்டு போடும் மக்கள் முட்டாள்களா?

வனிதாவின் சொந்த காரணங்களுக்காக, பிக் பாஸ் நிகழ்ச்சி அரங்குக்குள் போலீஸ் வரக்கூடாது என்பதற்காக வனிதாவை மக்கள் வெளியேற்றியது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியது, நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களுக்கு பிக் பாஸ் செய்த துரோகமாக கருதப்படாதா?

வனிதா உள்ளே வந்ததும் வெளியேற்றப்பட்ட அபிராமியின் எவிக்‌ஷன், மதுமிதாவுக்கும்- பாய்ஸ் டீமுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, லாஸ்லியா தர்ஷன் ஆகியோருடன் நல்ல புரிதலில் இருந்த சேரனை பிரித்தது, கஸ்தூரியை எவிக்ட் செய்ய வைத்தது என வனிதாவின் இன்ஃப்ளூயன்ஸில் தான் அத்தனையும் நடைபெற்றது. இது சரி எனும்போது, கவின் மீது வனிதா குற்றம் சாட்டுவது சரியா? என்றெல்லாம் கேள்விகள் எழும். இதற்கு பதிலை யார் தருவது?

கண்டிப்பாக கமல் சொல்லமாட்டார். அவருக்கு தன் கட்சியை பிராண்டிங் செய்வதற்கே நேரம் போதவில்லை. இதில் இதையெல்லாம் எங்கே கேட்கப்போகிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!


ஜெ. நினைவிடம்: வெளிநாட்டில் இருந்தபடி பன்னீரை ஆட்டுவிக்கும் எடப்பாடி


சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த சலுகை!


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

செவ்வாய் 3 செப் 2019