டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

விவிபேட் ஒப்புகைச் சீட்டு வழக்கு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள விவிபேட்டின் ஒப்புகைச் சீட்டை 100 சதவிகிதம் எண்ணக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 18) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நயினார் நாகேந்திரன் வழக்கு!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சுயேச்சை வேட்பாளர் ராகவன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சிறப்பு ரயில்கள்!

மக்களவை தேர்தலை ஒட்டி சென்னையில் இருந்து கோவை மற்றும் நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

உலக பாரம்பரிய தினம்!

உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் இன்று பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தபால் வாக்கு!

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்கு பதிவுசெய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திருப்பதி தரிசன டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

பஞ்சாப் – மும்பை மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதுகின்றன.

வானிலை நிலவரம்!

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 34-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மாதுளை ராய்த்தா

வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *