ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

Published On:

| By Kavi

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் இன்று (ஜனவரி 3) தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதித் தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசுவும், ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதில் பாஜக போட்டியிட்டால் தங்கள் தரப்பு வேட்பாளரைத் திரும்பப் பெறுவோம் என்று கூறியிருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

இந்நிலையில் டெல்லி சென்று வந்து ஓபிஎஸ், ஈபிஎஸை சந்தித்த பின் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இருவரையும் ஒன்றிணைக்க பாஜக முயற்சி செய்கிறது. திமுகவை வீழ்த்த வலுவான, உறுதியான, பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தச்சூழலில் ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் கு.ப.கிருஷ்ணன் ஈரோட்டில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த போது,

ஈரோடு கிழக்குத் தொகுதியில் எங்கள் வேட்பாளரைத் திரும்பப் பெற மாட்டோம். ஓபிஎஸ் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டார்” என்று தெரிவித்தார்.

அதன்படி செந்தில் முருகன் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் தனது வேட்புமனுவை இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.

பாஜக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பிரியா

“இடைத்தேர்தலில் திமுக முறைகேடு”: சி.வி.சண்முகம் புகார்!

‘சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து’ : இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share