கோடையில் ஏற்படும் உடல் வறட்சியை நீக்கி, சிறுநீரகத்தைச் சீராகச் செயல்படுத்த வைக்கும் தன்மை மாதுளை முத்துகளுக்கு உண்டு. இந்த முத்துகளுடன் கெட்டியான தயிர் சேர்த்து செய்யப்படும் இந்த ராய்த்தா, கோடைக்கேற்ற சிறந்த சைடிஷாக அமையும்.
என்ன தேவை?
மாதுளை முத்துகள் – ஒரு கப்
கெட்டித் தயிர் – ஒன்றரை கப்
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்)
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்துப் பிசிறவும். இதில் கெட்டித் தயிரைக் கலக்கவும். பரிமாறும் சமயம் மாதுளை முத்துகளைக் கலந்து பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முருங்கை – தால் சூப்
கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் கோஸ் கறி
GTvsDC : சொந்த மைதானத்தில் மோசமான தோல்வி : குஜராத் ரசிகர்கள் அதிர்ச்சி!
2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? : ரெய்னா கொடுத்த அப்டேட்!