காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது! top 10 news Tamil today November 15 2023
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (நவம்பர் 15) வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஞ்சள் நிற எச்சரிக்கை!
கனமழை காரணமாக சென்னை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி விடுமுறை!
சென்னையில் பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்காக புதிய திட்டம்!
பழங்குடியினரின் சமூக மேம்பாட்டுக்காக பிரத்யேகமாக ரூ.24,000 கோடியில் பிஎம் பிவிடிஜி என்ற புதிய திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
குரூஸ் பர்னாந்து மணி மண்டப திறப்பு விழா!
தூத்துக்குடியில் நேற்று ஒத்திவைக்கப்பட்ட குரூஸ் பர்னாந்து மணி மண்டப திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளார்.
ஓபிஎஸ் மேல்முறையீடு மனு விசாரணை!
அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
முல்லை பெரியாறு அணையில் ஆய்வு!
பருவ மழை காலங்களில் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து ஆகியவற்றை உறுதி செய்வதற்காக முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.
முதல் அரையிறுதி ஆட்டம்!
ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் அரை இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
சானியா மிர்சா பிறந்த தினம்!
ஆறு முறை கிராண்ஸ்ட்லாம் பட்டம் வென்றவரும், இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான இந்தியாவின் டென்னிஸ் புயல் சானியா மிர்சா பிறந்த தினம் இன்று.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 544வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. top 10 news Tamil today November 15 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சீஸ், அன்னாசி மற்றும் செர்ரி ஸ்டிக்
அயோத்தி கோவில்: அப்டேட் குமாரு