election commissioner appointment case

தேர்தல் ஆணையர்கள் நியமனம்..தடை விதிக்க முடியாது..ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

அரசியல் இந்தியா

election commissioner appointment case

தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கி பாஜக அரசு கொண்டுவந்த புதிய சட்டத்திற்கு எதிரான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே இரண்டு முறை உச்சநீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்திருந்தது.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தபிறகு, புதிய தேர்தல் ஆணையர்களை புதிய சட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது என்று இந்த வழக்கில் அவசர விசாரணை நடத்தக் கோரி வழக்கின் மனுதாரர்களான ஜெயா தாக்கூர் மற்றும் ADR (Association for Democratic Reforms) அமைப்பைச் சேர்ந்தவர்கள் கேட்டிருந்தனர். இதன் காரணமாக வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது.

வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, நேற்று(மார்ச் 14, 2024) இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் பாஜக அரசினால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த வழக்கு முக்கியமான ஒன்றாக கவனிக்கப்பட்டது.

இந்த வழக்கினை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் நீதிபதிகள் புதிய சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை வரும் மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் புதிய சட்டமானது தேர்தல்கள் நியாயமாக நடைபெறுவதை தடுத்துவிடும் என்று சொல்லி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் மற்றும் ADR (Association for Democratic Reforms) அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதியப்பட்ட இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷன் மற்றும் காலீஸ்வரம் ராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கு விசாரணையின் போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பொதுவாக நாங்கள் எந்த சட்டத்திற்கும் இடைக்காலத் தடை விதிப்பது கிடையாது என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.

The Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) act, 2023 என்ற பெயரில் புதிய சட்டத்தினை கடந்த 2023 டிசம்பர் மாதம் பாஜக அரசு பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றியது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக் குழுவில் பிரதமர், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறுவர் என்பதனை மாற்றி,

பிரதமர், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் மற்றும் யாரேனும் ஒரு கேபினெட் அமைச்சர் இடம்பெறுவர் என்பதாக மாற்றப்பட்டது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராகுல் காந்தி யாத்திரையின் தாக்கமே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: ஜெய்ராம் ரமேஷ்

திமுக – காங்கிரஸ் கூட்டணியின் தலைக்கனம் துடைத்தெறியப்படும்: மோடி காட்டம்!

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *