இரண்டாவது முறையாக திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

Published On:

| By Selvam

சென்னை அமைந்தகரையில் காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

திமுக பொதுத்தேர்தலை ஆற்காடு வீராசாமி நடத்தினார்.

ஆற்காடு வீராசாமி பேசும்போது, “இந்த வாய்ப்பினை வழங்கின கழக தலைமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கழக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவினை 2068 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் உள்ளனர்.

தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் அவர் இரண்டாவது முறையாக ஒருமனதாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.” என்றார்.

பொதுக்குழு அரங்கத்துக்கு வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின்

‘ஹரா’ படத்தில் குஷ்புவுடன் டூயட் : மோகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share