இன்று (மார்ச் 15) நடைபெறவிருந்த பாமக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, புதிய நீதி கட்சி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், தைலாபுரம் தோட்ட வளாகத்தில் இருக்கும் அரசியல் பயிலரங்கில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கூட்டுகிறார் என்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று (மார்ச் 14) நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த கூட்டத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்வதற்கான முறைப்படியான தகவல் கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்தநிலையில், இன்று நடைபெறவிருந்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தொடங்க மனம் இருந்தால் போதும்” : மாணவர்களிடையே வாசிப்பு – புதிய செயல் திட்டம்!
மம்தா பானர்ஜி உடல்நிலை : மருத்துவமனை இயக்குநர் அதிர்ச்சி பேட்டி!