doctors advised stalin medical health

சென்னைக்குள் என்றாலும்… முதல்வருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தல்!

அரசியல்

doctors advised stalin medical health

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நவம்பர் முதல் வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

சுமார் 5, 6 நாட்கள் ஓய்வுக்கு பிறகு தான் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

கடந்த நவம்பர் 18ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல் நலம் முழுமையாக குணமாகவில்லை.

தொண்டை வலியும் சோர்வும் அவருக்கு தொடர்ந்து இருப்பதாக அப்போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான் மருத்துவர்களின் அறிவுறுத்தலையடுத்து, கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட பயணங்களை கூட கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வெளியூர் பயணங்களை மட்டுமல்ல சென்னைக்குள்ளேயே அதிகமாக அலைய வேண்டாம் என்றும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் முதல்வருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

அதன் பேரில் சென்னைக்குள்ளேயே தனது பயணத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கு உதாரணமாக இன்று காலை சென்னை மயிலாப்பூரில் கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,100-வது இலவச திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பாஜக தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

நிர்வாக ரீதியாக ஒரு பக்கம் அதிரடி என்றால் அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வருவதை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறார் அமைச்சர் சேகர்பாபு.

அந்த வகையில் திருமண உதவி தேவைப்படுவோரை நேர்மையான வகையில் கண்டறிந்து அவர்களுக்கு இலவச திருமண நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறையே நடத்தி வைக்கிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,099 திருமணங்கள் நடந்திருக்கிற நிலையில் 1,100வது திருமணத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் நடத்தி வைப்பதாக இருந்தது.

அமைச்சர் சேகர்பாபு இதற்கான ஏற்பாடுகளில் இறங்கி இருந்த நிலையில், மருத்துவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம், ‘அவ்வளவு தூரம் இப்போதைய சூழ்நிலையில் போக வேண்டாம். ஓரிரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் உங்கள் பயணங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

இதை அமைச்சர் சேகர்பாபுவிடம் தெரியப்படுத்த உடனடியாக அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் இருந்து ஒன்று அல்லது ஒன்றரை கிலோ மீட்டருக்கு உள்ளே இருக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் இந்த திருமண நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் மாற்றி வைத்திருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மண்டபத்திலேயே நிகழ்ச்சியை நடத்துகிறார் அமைச்சர் சேகர்பாபு.

-வேந்தன் doctors advised stalin medical health

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Bigg Boss 7 Day – 53 ; தினேஷுக்கு எதிராக திரும்பும் ஹவுஸ்மேட்ஸ்!

பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *