கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள், வேட்புமனுக்களை திரும்பப் பெற்ற நிலையில், இபிஎஸ் அறிவித்த அதிமுக வேட்பாளரும் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதனால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் அறிவிக்கப்பட்டார்.
மற்றொருபுறம் ஓபிஎஸ் தரப்பும் புலிகேசி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.
பின்னர், ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர்கள், வேட்புமனுவை திரும்பப் பெறுவது என கர்நாடகா மாநில குழு ஆலோசனை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் குமாரும், கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டிடும் ஆனந்தராஜும் வேட்புமனுவை திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், பாஜக கேட்டுக் கொண்டதால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார்.
இதன்மூலம் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கர்நாடகா தேர்தலில் புலிகேசி நகர் வேட்பாளர் அன்பரசனை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதனை ஏற்று அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் அன்பரசன் தமது வேட்புமனுவை திரும்பப் பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டார்கெட் ஸ்டாலின்… அண்ணா நகர் கார்த்திக் வீட்டில் ஐடி ரெய்டு பின்னணி!
தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் அணி ?
தொடர் தோல்வி நாயகன் எடப்பாடி தப்பித்தார்