நிக்சனின் பிறந்த நாள் கொண்டாட்டமாக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கேக் வெட்டுவதாகத் தொடங்கியது எபிசோட். மேலும், அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் அவர் கௌரவ கேப்டனாக இந்த வீட்டில் இருப்பார் என ‘ஒரு நாள் முதல்வர்’ போன்ற ஒரு விஷயத்தை தினேஷ் அறிவித்தார். Tamil bigg boss season 7 day 53
ஆனால் அதன்படி எதுவும் நடந்ததாக எபிசோடில் காண முடியவில்லை. காலை விடிந்து வேக்கப் சாங்கிற்கு பிறகு நாளின் முதல் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. ‘உருட்டு அப்படி’ என்கிற அந்த டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ் தோற்றால் வீட்டிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை நேரடியாக அடுத்த வார நாமினேஷனுக்கு அனுப்ப வேண்டும். இது ஹவுஸ்மேட்ஸுக்கு தண்டனை போல் தெரியவில்லை, ஓபன் நாமினேஷனுக்கான வாய்ப்பு போலத் தான் தெரிந்தது.
ஹவுஸ்மேட்ஸும் பேசி வைத்து இந்த வாரத்தில் மிக ஸ்ட்ரிக்ட் கேப்டனாக நடந்துகொண்ட தினேஷை குறிவைத்தே டாஸ்கில் தோற்று, அவரை நாமினேட் செய்தனர். இதை பூர்ணிமாவும் விஷ்ணுவும் பக்காவாக பிளான் செய்தே நடத்தினர்.
அவர்களுக்கு தினேஷை நாமினேட் செய்ய வேண்டும் என்பதை விட அடுத்த வாரமும் அவர் கேப்டனாகி விடக்கூடாது என்கிற எண்ணமே அதிகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து, ஸ்டார்களை வைத்து மாயா மற்றும் அக்ஷயாவை இந்த வாரம் நேரடி நாமினேட் செய்த விஷ்ணுவிடம், ‘இதில் மணி – பூர்ணிமாவிற்கு பங்கு இருந்ததா..?’ என பூர்ணிமாவும் மாயாவும் விளக்கம் கேட்டு விசாரித்தனர். ‘இருந்துச்சுன்னு சொல்ல முடியாது. இல்லன்னும் சொல்ல முடியாது’ என்பது போல ஒரு பதிலை சொன்னார் விஷ்ணு.
மறுபக்கம் தான் ஏன் இத்தனை ஸ்ட்ரிக்ட் கேப்டனாக நடந்துகொண்டேன் என தனது நெருங்கிய வட்டமான மணி, ரவீனா, அர்ச்சனா, கூல் சுரேஷ் ஆகியோரிடம் விளக்கிக் கொண்டிருந்தார் தினேஷ். ‘ஒரு சின்ன ஒழுக்கமுறையை தானே கடைபிடிக்க சொன்னேன். அதுவே இவங்களால பண்ண முடியலையா..?’ என மற்றவர்களிடம் கேட்டார் தினேஷ்.
‘நீங்க சொல்றது 200 சதவீதம் கரெக்ட். ஆனா இந்த உலகத்துல இந்தியன் தாத்தா மாதிரி இருந்தா சரியா இருக்காது’ என்றார் கூல் சுரேஷ். ‘மாயா ஏன் இந்த வாரம் சைலண்ட்டா இருக்காங்கன்னே தெரியல. ஏதோ தப்பா இருக்கு’ என்றார் அர்ச்சனா. இந்த வாரம் அந்த ‘உல்ஃப் கேங்(wolf gang)’ல இருந்து ஒருத்தர் போவது உறுதி என்றார் தினேஷ்.
ஸ்மால் பாஸ் வீட்டின் திண்ணையில் பூர்ணிமாவிடம் ‘தினேஷை அடிக்கிறது ஒரு மேட்டரே இல்ல’ என்றார் மாயா. மேலும், விஷ்ணு – பூர்ணிமா லவ் டிராக் போன்றவைகளைக் குறித்தும் வழக்கம் போல் புறணி பேசினர்.
மூன்றாம் பூகம்பம் டாஸ்க் பிக் பாஸால் அறிவிக்கப்பட்டது. அதே வடக்கு யூடியூப் சேனலின் மற்றொரு டாஸ்கை காப்பியடித்து வைத்த பிக் பாஸ் கிரியேடிவ் டீமின் டாஸ்கில் அத்தனை ஹவுஸ்மேட்ஸும் தோல்வியுற்றனர். இந்நிலையில், மொத்தம் நடந்த மூன்று பூகம்பம் டாஸ்க்களில் இரண்டு டாஸ்க்களில் ஹவுஸ்மேட்ஸ் தோல்வியுற்றனர்.
இதனால் மொத்தம் எத்தனை வைல்டு கார்டு எண்ட்ரீ இருக்கப்போகிறது, எத்தனை பேர் எவிக்ட் ஆகப் போகிறார்கள் என்பது குறித்து வார இறுதியில் தெரியுமென பிக் பாஸ் அறிவித்தார். ஏற்கனவே வீட்டிலிருந்து வெளியேறிய விஜய் வர்மாவும் அனன்யா ராவ்வும் வைல்டு கார்டு எண்ட்ரீ தரவுள்ளனர் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹவுஸ்மேட்ஸின் வாழ்வில் நடந்த பூகம்பத்தைப் பற்றி அனைவரின் முன்நிலையிலும் சொல்ல வேண்டும் என்கிற டாஸ்கின் தொடர்ச்சியாக அதை பிராவோ தொடங்கினார். இந்த டாஸ்கில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து விசித்ரா சொன்ன விஷயம் வெளியில் மிக வைரலாக விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஒரு சக ஆணால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றியும், அதிலிருந்து அவர் பாதிக்கப்பட்டது குறித்தும் பிராவோ பேசினார். அதனால் அவர் கடந்து வந்த மனசிதைவுகளை சொல்லும் போது கண்கலங்கினார் பிராவோ. அவரைத் தொடந்து புகை பழக்கத்தால் தன் தந்தை பாதிக்கப்பட்ட கதையை மணியும், தனக்கு உறுதுணையாக இருந்த சித்தப்பாவின் மரணம் குறித்து விஷ்ணுவும் மிக உணர்ச்சிமிக்க பதிவு செய்தனர். அதில் பயங்கரமாக கண் கலங்கிய மணியை பூர்ணிமா சமாதனம் செய்யும் அழகிய முரண் காட்சியோடு முற்று பெற்றது எபிசோட்.
– ஷா Tamil bigg boss season 7 day 53
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மன்னிப்பு கேட்ட கௌதம்: துருவ நட்சத்திரம் ரிலீஸ் கேன்சல்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!